இலக்கண வகுப்பு
இலக்கண
குறிப்பறிதல்
தொடர்
தொடர் என்பது சொற்கள் இரண்டு முதலாகத்
தொடர்ந்து வந்து பொருள் தருவது.
முருகன் உணவு உண்டான்.
தொடர் இரண்டு வகைப்படும்.
1.தொகை நிலைத் தொடர்
2.தொகா நிலைத் தொடர்
1.தொகை
நிலைத் தொடர்
இரண்டு சொற்கள் இணைந்து தொடராகும் போது
அவற்றிற்கிடையே வினை,உவமை,வேற்றுமை முதலானவற்றுள் ஏதேனும் ஒரு உருபு மறைந்து வருவது
தொகை நிலைத் தொடர் எனப்படும்.
இது ஆறு வகைப்படும்.
1.வேற்றுமைத் தொகை 2.வினைத்தொகை 3.பண்புத்தொகை
4.உவமைத் தொகை 5.உம்மைத்தொகை 6.அன்மொழித்தொகை.
1.வேற்றுமைத்
தொகை
பெயரின் பொருளை வேறுபடுத்திக் காட்டும்
உருபிற்கு வேற்றுமை உருபு என்று பெயர். வேற்றுமை எண்வகைப்படும்.
முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் கிடையாது.மற்ற
ஆறு வேற்றுமைக்கும் உருபுகள் உண்டு.இவ்வகையான உருபுகள் இரண்டு சொற்களுக்கு இடையே மறைந்து
வருவதனை வேற்றுமைத் தொகை எனப்படும்.
பொதுவாக ஐ,ஆல்,கு,இன்,அது,கண் என்ற
உருபுகள் மறைந்து வரும்.
1.பால் பருகினான். -ஐ
2.தலை வணங்கினான். -ஆல்
3.வேலன் மகன். -கு
4.ஊர் நீங்கினான். -இன்
5.செங்குட்டுவன் சட்டை. -அது
6.குகைப்புலி -கண்
நின்னகர்-6
என்பெயர்-6
என்கால்-6
என்பதி-6
வழிக்கரை-6
கார்குலாம்-6
என்னுயிர்-6
பணிவிடம்-6
நதிப்பரப்பு-6
|
போர்குகன் -2
நீர்முகில் -2
திரைக்கங்கை-2
நீர்தடம்-2
பூதி சாத்த -2
செவியறுத்து-2
வரி உழுவை- 2
கவையடிக்கேழல்-2
|
வள்ளுகிர்புலி-2
கொலைப்புலி-2
தார்வேந்தன்
– 2
நின்கேள்—4
(கு)
|
2.வினைத்தொகை
காலங்காட்டும் இடை நிலையும் ,பெயரெச்ச
விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும். முக்காலத்திற்கும் ஏற்பப்
பொருள் கொள்ளலாம்.
”காலம்கரந்த
பெயரெச்சம் வினைத்தொகை”-நன்னூல்.
உண்கலம்
ஆடுகொடி
பாய்புலி
அலைகடல்
செய்தொழில்
|
பொங்குகடல்
வருபுனல்
நிதிதருகவிகை
பொழிதருமணி
பணைதருமணி
|
சூழ்கழல்
செய்கொல்லன்
செய்வினை
உகுநீர்
|
3.பண்புத்தொகை
இரு சொற்களுக்கு இடையில் “ஆகிய”,”ஆன”
என்னும் பண்பு உருபுகளும் “மை” விகுதியும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
வெண்ணிலவு
சதுரக்கல்
இன்சுவை
அரும்பெறல்
பெருங்குடி
கடுங்கோல்
நன்னுதல்
|
நல்லொழுக்கம்
தீயொழுக்கம்
தமிழ்மொழி
நன்மொழி
நெடுநாவாய்
நெடுநீர்
|
செந்தமிழ்
பேராசிரியர்
செழுந்தமிழ்
மென்கண்
அருவினை
நன்கலம்
|
மல்லிகை
பூ
சேதாம்பல்
பெருஞ்சிரம்
தண்டனி
திண்டிரல்
புன்கண்
|
4.உம்மைத்தொகை
இரு சொற்கள் இணையும் போது அவற்றிற்கு
இடையில் “உம்” என்னும் இடைச்சொல் இடையிலும், இறுதியிலும் மறைந்து வந்து பொருள் தந்தால்
அது உம்மைத்தொகை எனப்படும்.
கபிலபரணர்
உற்றார் உறவினர்
மா பலா வாழை
|
தேன் மீன்
தாய் தந்தை
சிரமுகம்
|
கல்வி செல்வம் வீரம்
இராமன் சீதை
இனிப்பு காரம்
|
5.உவமைத்தொகை
இரு
சொற்களுக்கு இடையில் ”போன்ற” என்னும் உவம உருபு மறைந்து வரும் தொடர் உவமைத் தொடர் எனப்படும்.
கயல்விழி
அன்னநடை
அமுதசொல்
கல்திரள்தோள்
தேன்தமிழ்
|
பூவிரல்
மதிமுகம்
முத்துப்பல்
விற்புருவம்
|
மலர்சேவடி
பூதரப்புயம்
மலரடி
மலர்ப்பாதம்
|
6.அன்மொழித்தொகை
இரு
சொற்களுக்கு இடையே வேற்றுமை,வினை,உம்மை,பண்பு ஆகிய தொகை நிலைகளுக்குப் புறத்தே அல்லாத
சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை எனப்படும்.
*கயல்விழி
வந்தாள்
கயல்விழி
எனபது உவமைத்தொகை. ’உடைய’ ,’பெண்’ என்ற சொற்கள் தொடரில் இல்லாதவை.உவமைத்தொகையை அடுத்து
அல்லாத மொழி தொக்கி வருவதனால் இத்தொடரை உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
எனப்படும்.
மடக்கொடி
தேன்மொழி
வந்தாள்
|
அங்கணர்
துடியிடை வந்தாள்
|
பைந்தொடி
கேளாய்
|
தொகாநிலைத் தொடர்
இரண்டு
சொற்கள் இணைந்து தொடராகும் போது அவற்றிற்கு இடையில் ஒரு சொல்லோ ,உருபோ மறையாமல் வந்து
பொருள் தந்தால் அது தொகா நிலைத்தொடர் எனப்படும்.
1.எழுவாய்த் தொடர்
எழுவாயைத்
தொடர்ந்து பயனிலை வந்தால் அது எழுவாய்த்தொடர்
எனப்படும்.
கபிலன் வந்தான்.
இராமன் சென்றான்.
மாடு வந்தது.
2.விளித்தொடர்
விளி என்றால்
அழைத்தல் என்று பெயர்.அழைத்தலின் பொருட்டு வரும்.பெயர்ச்சொல் நீண்டு வருதல் இயல்பு.
*கதிரவா வா!
வா என்பது
சொல் தானே தவிற சொற்றொடராகாது. அது பலர் அமர்ந்திருக்கும் போது கதிரவனை மட்டும் குறித்து
”கதிரவா வா!” என அழைப்பதனால் அது விளித்தொடர் ஆயிற்று.
3.வினைமுற்றுத் தொடர்
வினை முற்று
முதலில் வந்து பெயரைத் தொடர்ந்தால் அது வினைமுற்றுத் தொடர் எனப்படும்.
வகைகள்.
தன்மை ஒருமை வினைமுற்று.-விடேன்.(தன்மைப் பெயர்,ஒருமைப்
பொருள்)
தன்மை பன்மை வினைமுற்று.-விடோம்.(தன்மைப் பெயர்,பன்மைப்
பொருள்)
வியங்கோள்
வினைமுற்று –காக்க,தருக,வருக,கெடுக (க-முடிந்தால்)
பலர்பால்
வினைமுற்று - எய்துவர்
பொன்னன்-குறிப்பு
உழுதான்– தெரிநிலை
படித்தான்
சென்றான்
|
தந்தனென்
– த.ஒரு.விமு.
அழைத்தி(அழைப்பாய்)
இருத்தி
|
கண்டேன்
சீதையை
வந்தான்
இராமன்.
சென்றான்
செல்வன்.
|
தெரிநிலை வினைமுற்று:செய்பவன் ,கருவி, நிலம்,செயல்,காலம்
செயப்படுபொருள் என்ற ஆறனையும் தெரிவித்து காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது தெரிநிலை
வினைமுற்று எனப்படும்.
குறிப்பு வினைமுற்று:பொருள் முதல் ஆறனையும் முதலாகக் கொண்டு
,முன் சொல்லப்பட்ட செய்பவன் முதலான ஆறனுள் கருத்தா ஒன்றை மட்டும் தெரிவித்துக் காலத்தை
குறிப்பாகக் காட்டும் வினைமுற்று குறிப்பு வினைமுற்று எனப்படும்.
4.பெயரெச்சத் தொடர்.
ஓர்
எச்ச வினை பெயர்ச்சொல்லோடு முடிந்தால் அது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
வந்த அரசன்.
சென்ற பரதன்.
விழுந்த
மரம்.
இழிந்த
பிறப்பு.
அமைந்த
காதல்
|
எய்தாப் பழி
பழியில்லா மன்னன்.
இருந்த
தாழ்ந்த
தளர்ந்த
|
இனிய நண்ப
வாழும்
குடி
படிக்கும்
பையன்
கூவா
|
5.வினையெச்சத் தொடர்
ஓர்
எச்ச வினையானது வினைமுற்றைக் கொண்டு முடிந்தால்
அது வினையெச்ச தொடர் எனப்படும்.(உ,இ)
வந்து போனான்
சென்று
வந்தான்
நடந்து
சென்றான்
தெரிந்து
|
நோக்கி
உகுந்து
புகுந்து
குறுகி
|
அறிந்து
பரிந்து
கலங்காது-எதிர்மறை
சேவிக்க(சேவித்தல்)
|
6.வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
ஓர்
வேற்றுமை உருபானது மறையாமல் வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துவது வேற்றுமை தொகாநிலைத்தொடர்
எனப்படும்.
வீட்டைக்கட்டினான்
மரத்தை
வெட்டினான்
சட்டையை
வீசினான்
போரை
உடைய குகன்
நீரையுடைய
முகிழ்
எனது
உயிர்
|
வேலனுக்கு
மகன்
நினக்குகேள்
எனது பெயர்
வரியை கொண்ட
புலி
தாரை அணிந்த
வேந்தன்.
|
எனது பதி
வழியினதுகரை
கொலையை
விரும்பும் புலி
காரினது
குலாம்
|
7. இடைச்சொற்றொடர்
ஓர்
இடைச் சொல்லை அடுத்து ஏதேனும் ஒரு சொல் தொடர்ந்து
வந்தால் அது இடைச்சொற்றொடர் எனப்படும்.
தில், மன், மற்று, மற்றை, கொல், சோவென, பொள்ளென, திடுக்கென போன்ற இடைசொற்கள்.
|
மற்றொன்று
=மற்று+ஒன்று.
சோவெனப்
பெய்தது.
|
8.உரிச்சொற்றொடர்
ஒரு
பெயர்ச்சொல்லின் பொருளை மிகைப் படுத்திக்கூற பயன்படுத்தப்படும் சொற்றொடர் உரிச்சொற்றொடர்
எனப்படும்.(மா,தவ,சால,உறு, நனி)
மாமுனிவர்
சாலச் சிறந்தது
உறுவேனில்
உறுபொருள் - மிகுந்தபொருள்
கூர்படை
|
மாதவர்
நனிகடிது
தடக்கை
- பெருமை
மிக்ககை
வைவேல்
- கூர்மையான
வேல்
|
மல்லலம்
குருத்து
தடக்கரி
கடிநகர் - காவல் மிக்கநகர்
மாநகர் - பெரிய நகர்
|
9.அடுக்குத்தொடர்
ஒரே
சொல் மீண்டும் மீண்டும் பலமுறை அடுக்கி வந்தால் அது அடுக்குத்தொடர் எனப்படும். பிரித்தால்
பொருள் தரும்.விரைவு,வெகுளி ,அச்சம்,அவலம் ஆகிய பொருளின் காரணமாக வரும்.மூன்று , நான்கு
முறைகள் கூட அடுக்கி வரலாம்.
பாம்பு
பாம்பு
வாழ்க வாழ்க
வாழ்க
செல்க செல்க
நன்று
நன்று
|
புதிது
புதிது
சொல்லிச்
சொல்லி
போ போ போ
இவை இவை
|
வருக வருக
வருக
தீ தீ தீ
கோடி கோடி
அவை அவை
|
இரட்டைக் கிளவி
இரண்டு
முறை மட்டுமே வரும்.பிரித்தால் பொருள் தராது.அடை மொழியாய்க் குறிப்புப் பொருளில் வரும்.
சல சல
கல கல
மள மள
|
கொட கொட
லொடலொட
மொடமொட
17. கடுகடு
|
கிகிடு கிடு
ச சிடு சிடு
க கல கல
ச சல் சல்
|
வினையாலணையும் பெயர்:
ஒரு வினைமுற்று
சொல் தன் வினைமுற்றுப்
பொருளைக் காட்டாமல்
வினை செய்தவனையோ அல்லது
பொருளையோ குறிக்கும்
பெயர்ச்சொல்லாக வருவதே
வினையாலணையும் பெயர்
ஆகும்.
(எ.கா) முடித்தவன்,
சென்றவர்
சென்றனன்
சென்றவர்
சென்றனன்
கொடுக்கப்பட்டுள்ள
விடைகளில் எந்த விடை அவர்,அவன்,அனன் போன்றவற்றில் முடிகிறதோ அதுவே வினையாலணையும் பெயர் என முடிவு கொள்க.
'செய்தவர்'
என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
அ) காலப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)வினையாலணையும் பெயர்
ஈ) பண்புப்பெயர்
காட்சியவர் என்ற சொல் 'அவர்' என முடிவதால் அதுவே வினையாலணையும் பெயர் ஆகும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
Prepared by P.K.VELMURUGAN
M.A.,B.ED., Cell: 96988 20459.
அ) காலப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)வினையாலணையும் பெயர்
ஈ) பண்புப்பெயர்
காட்சியவர் என்ற சொல் 'அவர்' என முடிவதால் அதுவே வினையாலணையும் பெயர் ஆகும்.
இலக்கணக்குறிப்பு அறிதல்
பலர்பால் வினைமுற்று - என்ப
வினையாலணையும் பெயர்
மேற்கொள்பவர்,அகழ்வார்,இகழ்வார்,ஒறுத்தார்,பொறுத்தார்,செய்தாரை,இறந்தார்,துறந்தார்,நோற்கிற்பவர்
,பற்றுவார்,அஞ்சான்,ஆற்றுவார், மாற்றார்,போற்றுவார்,சான்றவர், வாட்டான்,சார்ந்தவர்
குறிப்பு வினைமுற்று
அன்று,
நன்று ,இல்லை
தொழிற்பெயர்
கண்ணோட்டம்,கற்றல்,பெறுதல்,வாழ்தல்,பொறுத்தல்,மறத்தல்,ஓரால்,பொறை,மகிழ்ச்சி,குற்றம்,
பணிதல் ,ஈதல் ,இழுக்கல்,ஒழுக்கம், தெளிதல்,ஆக்கல்,நீக்கல்,விளையாட்டு, கண்ணோட்டம்,செல்லாமை,
உரைத்தல், என்றல், காத்தல்
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
கொல்லா நலத்து, கல்லா ஒருவருக்கும், சொல்லா நலத்து,கேளாத்தகையவே,குறையா
வன்கண்,துவ்வா விடம்,பொல்லாக் காட்சி,அலகிலா விளையாட்டு,இன்னாச் சொல்,தேராக் கீரன்
இன்மை,திண்மை,–பண்புப்பெயர்கள்
உரிச்சொற்றொடர்
மல்லல்
நெடுமதில் ,மாநகர்,தடந்தோள், இருநிலம் – பெரிய நிலம்
அசைச்சொற்கள்
மன்,ஓ
பண்புத்தொகைகள்
செங்கை, பழந்தமிழ், சிற்றினம், பெருங்குணம் ,சேவடி, வெவ்விருப்பு,
நெடுமதில், கருமுகில், வெண்மதி, நல்லறம், வன்மறவோர், வெண்குடை, கருங்கோல், பெருந்தேன்,
ஆரளவு, செந்நாய், அருந்தவர், நல்வினை, பெரும்பேறு, பல்லுயிர், நல்வினை, தீவினை, பேரின்பம்,
கடுஞ்சொல், நீலமுடி, நன்செய் , புன்செய் ,தொல்லுலகு,செந்தீ,வெம்மை
இருப்பாணி
–வலித்தல் விகாரம்
உவமைத்தொகை
கனிவாய்,தளிர்க்கை,இலைவேல்
ஆய்தொடி
நல்லாய்- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடந்தொக்க தொகை
நாழி
–ஆகுபெயர்
துய்ப்பேம்
–தன்மை பன்மை வினைமுற்று
கிளத்தினேன்
– தன்மை ஒருமை வினைமுற்று
உயர்வு
சிறப்பும்மை – நிலத்தினும், வானினும், நீரினும்
இழிவு
சிறப்பும்மை – வயிற்றுக்கும்
அவி
உணவு –இருபெயரிட்டுப்பண்புத்தொகை
ஊற்று
கோல் –ஊன்றுகோல் என்பதன் வலித்தல் விகாரம்
பெயரெச்சம்
ஆன்ற பெருமை,வியர்த்த வியர்வன்றோ,ஆய்ந்த பொற்கிழி ,தேய்ந்த,ஆய்ந்த,பாய்ந்த,காய்ந்த
எண்ணும்மை
அவியினும் வாழினும்,கருமுகிலும் வெண்மதியும்,தேவியும் ஆயமும்,பாலடையும்
நறுநெய்யும் தேனும், தாளமும் மேளமும்
வினையெச்சம்
வழங்கி, வெந்து, உலர்ந்து, எனா, கூர, கடக்க , ஓடி, இளைத்து
, நோக்கி, போற்றி, பொதிந்து, உண்ணாது, கடந்து, பாய்ந்து, செறிந்து,உரைத்து,இரந்து,சொல்லி,இரைஞ்சி,விளக்கி,
சிறந்து, விழுந்து
வினைத்தொகை
வாங்குவில், உயர்துலை, செய்தவம், வீழ்கதிர், ஆழ்நரகு, பயன்தெரி
புலவர், புனைமலர்
உருவகங்கள்
மருப்பூசி,மார்போலை,காமத்தீ,பதமலர்
மாறன்
களிறு – பாண்டியன் ஆண் யானை – ஆறாம் வேற்றுமைத்தொகை
வாழ்க
– வியங்கோள் வினைமுற்று
அரைசன்
– இடைப்போலி
யாவையும்
–முற்றும்மை
விருந்து
–பண்பாகு பெயர்
நீங்காமை –
எதிர்மறை தொழிற்பெயர்
விடல்
-அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
கெடாஅ,விடாஅர்
– செய்யுளிசை அளபெடை
கெடுப்பதூஉம்,எடுப்பதூஉம்,
உள்ளதூஉம் – இன்னிசை அளபெடை
குடிதழீஇக்,அடிதழீஇ,
நசைஇ – சொல்லிசை அளபெடை
எங்ங்கி,அங்ங்கு
– ஒற்றளபெடை
நுந்தை- நும் தந்தை என்பதன் மரூஉ
அடவிமலையாறு
– உம்மைத்தொகை
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------
வேற்றுமை
பெயரின்
பொருளை வேறுபடுத்திக் காட்டும் உருபிற்கு வேற்றுமை உருபு என்று பெயர்.
வேற்றுமை
எண்வகைப்படும்.
வேற்றுமை
|
வேறுபெயர்கள்
|
உருபுகள்
|
பொருள்களில்
வருவது
|
உதாரணம்
|
சொல்லுருபுகள்
|
1
|
எழுவாய்
வேற்றுமை
|
-
|
எழுவாய்
வினை முற்று,பெயர்சொல்,வினைச் சொல் இவற்றில் ஒன்றினை பயனிலையாகக் கொண்டு முடியும்.
|
கண்ணன் வந்தான்.
கண்ணன் என் தம்பி.
|
|
2
|
செயப்படுபொருள்
வேற்றுமை
|
ஐ
|
ஆக்கல்,அழித்தல்,அடைதல்,
நீத்தல்,ஒத்தல்,உடைமை
|
வளவன்பள்ளியைக் கட்டினான்.
சோழன் பகைவரை
அழித்தான்.
தேன்மொழி கோவிலை
அடைந்தாள்.
குழகன் சினத்தை
விடுத்தான்,
கயல்விழி குயிலைப்
போன்றவள்.
கண்ணன் செல்வத்தை
உடையவன்.
|
|
3
|
-
|
ஆல்,ஆன்,ஒடு,ஓடு
|
கருவி,கருத்தா
முதற்கருவி,துணைக்கருவி
இயற்றுதல்
கருத்தா,ஏவுதல் கருத்தா
|
நாரால் கயிறு
திரித்தான்.
கையால் கயிறு
திரித்தான்.
தச்சனால் நாற்காலி
செய்யப்பட்டது.
இராஜராஜ சோழனால்
கோவில் கட்டப்பட்டது.
தாயொடு குழந்தை
சென்றது
நாயோடு குட்டி
சென்றது.
நூல் கொண்டு தைத்தான்.
ஆறுமுகனுடன் வள்ளி
சென்றாள்
|
கொண்டு,உடன்
|
4
|
கு(ஆக)
|
கொடை,பகை,
நட்பு, தகவு, அதுவாதல்,பொருட்டு,முறை,எல்லை
|
புலவருக்கு பரிசு
கொடுத்தார்.
நோய்க்கு பகை
மருந்து.
பாரிக்கு நண்பர்
கபிலர்.
வீட்டிற்கு ஒரு
பிள்ளை.
வளையலுக்குப்
பொன்.
கூலிக்கு வேலை.
கோவலனுக்கு மனைவி
கண்ணகி.
திருத்தணிக்கு
வடக்கே வேங்கடம்.
கூலியின் பொருட்டு
வேலை செய்தான்.
|
பொருட்டு,
நிமித்தம்
|
|
5
|
இல்,
இன்
|
நீங்கல்,ஒப்பு,எல்லை,ஏது
|
தலையின் இழிந்த
மயிர்.
பாலின் நிறம்
கொக்கு.
சென்னையின் மேற்கு
வேலூர்.
அறிவில் மிக்கவர்
ஒளவை.
வேலன் ஊரிலிருந்து
வந்தான்.
அரசன் தேரினின்று
இறங்கினான்.
கயல்விழி என்னைவிட
பெரியவள்.
தமிழைக் காட்டிலும்
உயர்வான மொழி உண்டோ.
|
இருந்து,விட,காட்டிலும்,நின்று
|
|
6
|
அது,ஆது(ஒருமை),அ(பன்மை)
|
கிழமை(உரிமை)
|
எனது வீடு.
எனாது நூல்.
தை,மாசி எனத்
தமிழ் மாதங்கள் பன்னிரண்டு.
என்னுடைய வீடு.
|
உடைய
|
|
7
|
கண்.கால்,மேல்,கீழ்,இடம்,இல்
|
இல்-இடப்
பொருளில் வரும்
5-இல்
ஒப்பு,நீங்கல்,ஏது பொருளில்
மாலையில்
மலர்கள்.
மாலையில்
மலர்களை பிரித்தான்.
|
மணியில் ஒலி.
வீட்டின்கண் பூனை.
அவனுக்கு என்மேல்
வெறுப்பு.
பெட்டியில் பணம்.
|
||
8
|
விளி
வேற்றுமை
|
-
|
படர்க்கை
பெயரை முன்னிலையக்கு அழைக்க பயன்படுகின்றது.
|
கிளியே பேசு!
கண்ணா வா!
|
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இலக்கண வகுப்பு -2
ஆகுபெயர்
ஒன்றின் இயற்பெயர் தன்னை குறிக்காமல்
தன்னோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
எ.கா.இந்தியா மட்டைபந்துப்போட்டியில்
வென்றது.
ஆகுபெயர்
பதினாறு வகைப்படும்
1.முதலாகு பெயர் (அ) பொருளாகு பெயர்
முதற்பொருளானது சினையாகிய உறுப்பிற்கு
ஆகி வருவது முதலாகுபெயர் எனப்படும்.
எ.கா.
மல்லிகை சூடினாள். (மல்லிகை –கொடி ஆனால் இங்கு சினை-பூ)
2. .சினையாகுபெயர்
ஒரு சினைப்பெயர் அதனைக் குறிக்காமல்
முதற்பொருளுக்கு ஆகி வருவது சினையாகுபெயர் என்று பெயர்
எ.கா.வெற்றிலை
நட்டான். (வெற்றிலை –சினைப்பெயர்,இங்கு கொடி)
3. இடவாகு பெயர்
ஒரு இடப்பெயர் தன்னைக் குறிக்காமல்
அந்த இடத்தில் உள்ள பொருளைக் குறிப்பது இடவாகு பெயர் எனப்படும்.
எ.கா.
இந்தியா மட்டைப்பந்துப் போட்டியில் வென்றது.
4.
தானியாகுபெயர்
தானி என்றால் பொருள்,தானம் என்றால்
இடம் .ஒரு இடத்தில் உள்ள ஒரு பொருளின் பெயர்
அது சார்ந்திருக்கும் இடத்திற்கு பெயராகி வருவது தானியாகு பெயர்.
எ.கா.அடுப்பிலிருந்து
பாலை இறக்கு.(பால்-பொருள்,பாத்திரம்-இடம்)
5.காலவாகு பெயர்
ஒரு காலப்பெயரானது தன்னைக் குறிக்காமல்
தன்னோடு தொடர்புடைய வேறு பொருளைக் குறிப்பது
காலவாகுபெயர் எனப்படும்.
எ.கா.
திசம்பர் பூ சூடி வந்தாள்.
6.பண்பாகுபெயர் (அ) குணவாகுபெயர்
ஒரு பண்பின் பெயர் தன்னோடு தொடர்புடைய
ஒரு பொருளுக்கு பெயராகி வருவது பண்பாகுபெயர் அல்லது குணவாகு பெயர் ஆகும்.
எ.கா.பொங்கலுக்கு
வெள்ளை அடித்தான்.
இனிப்பு சாப்பிடுங்கள்.
காரம் சாப்பிடுங்கள்.
7.தொழிலாகு பெயர்
ஒரு தொழிலின் பெயர் அதனால் உருவாகின்ற
பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் ஆகும்.
எ.கா.பொங்கல்
உண்டான்.
8.எண்ணலளவை ஆகுபெயர்
ஓர் எண்ணலளவையின் பெயர் அந்த அளவுள்ள
பொருளுக்குப் பெயராகி வருவது எண்ணலளவை ஆகுபெயர் எனப்படும்.
எ,கா.
நாலும்
இரண்டும் சொல்லுக்கு உறுதி.
ஒன்று
பெற்றால் ஒளிமயம்.
9.எடுத்தல் அளவை (அ) நிறுத்தல் அளவை ஆகுபெயர்
ஓர் எடுத்தலளவையின் பெயர் அந்த அளவுள்ள
பொருளுக்குப் பெயராகி வருவது எடுத்தலளவை ஆகுபெயர் எனப்படும்.
எ.கா.
நூறு கிராம் கொடுங்கள்.
மூன்று கிலோ தாருங்கள்.
10.முகத்தல் அளவை ஆகுபெயர்
ஓர் முகத்தலளவையின் பெயர் அந்த அளவுள்ள
பொருளுக்குப் பெயராகி வருவது முகத்தலளவை ஆகுபெயர் எனப்படும்.
எ.கா.
மூன்று லிட்டர் வாங்கிவந்தான்.
ஐம்பது மில்லி கொடுங்கள்.
11. நீட்டல் அளவை ஆகுபெயர்
ஓர் நீட்டலளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்குப்
பெயராகி வருவது நீட்டலளவை ஆகுபெயர் எனப்படும்.
எ.கா.
ஆறு மீட்டர் கொடு.
இரண்டு மீட்டர் இருக்கிறது.
12.சொல்லாகு பெயர்
ஒரு சொல்லின் பெயர் அச்சொல்லின் பொருளுக்கு
பெயராகி வருவது சொல்லாகு பெயர் எனப்படும்.
எ.கா.
நான் முதல்வரைப் பார்த்தேன்.
13.கருவியாகு பெயர் அல்லது காரணவாகு பெயர்
ஒரு
கருவியின் பெயர் அதனால் ஆகும் பொருளுக்கு ஆகிவருவது கருவியாகு பெயர்
என்று பெயர்.
கருவி
கருத்தாவிற்கு ஆகி வருவது.
எ.கா.
யாழ் கேட்டு மகிழ்ந்தான்.
நான் பட்டு அணிவேன்.
யாழ், பட்டு
- கருவி. இசை,பட்டாடை –கருத்தா.
14.காரியவாகு பெயர்
ஒரு காரியத்தின் பெயர் அதன் காரணமாகிய
கருவிக்கு ஆகி வருவது கருத்தாவாகு பெயர் எனப்படும்.
எ.கா.
நான் சமையல் கற்றேன்.
நான் அலங்காரம் கற்றேன்.
சமையல்
,அலங்காரம் – கருத்தா, நூல்கள் - கருத்தா
15.கருத்தாவாகு பெயர்
ஒரு கருத்தாவின் பெயர் அதனோடு தொடர்புடைய
நூலுக்கு பெயராகி வருவது கருத்தாவாகு பெயர் எனப்படும்.
திருவள்ளுவரைக்
கற்றுப்பார்.
பாரதியைப்
படித்தேன்.
திருவள்ளுவர்
,பாரதி – கருத்தா
ஆனால்
இங்கு அவர்களால் இயற்றப்பட்ட நூலுக்கு ஆகிவந்துள்ளது.
16.உவைமையாகு பெயர்
ஓர் உவமையின் பெயர் அதனால் உணர்த்தப்படும்
உவமேயத்திற்கு பொருளாகி வருவது உவமையாகு பெயர் எனப்படும்.
எ.கா.
நாரதர் வருகின்றார்.
சகுனி சென்றார்.
No comments:
Post a Comment